ரோமாபுரிப் பட்டினம். ஒரு சுற்றுலா
சும்மா
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 27 ஜனவரி, 2026
யூ ட்யூபில் 5311 - 5320 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
5311.தினம் ஒரு திருக்குறள் - 551 l கொடுங்கோன்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ZKAkpJMslfQ
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5312.தினம் ஒரு திருக்குறள் - 552 l கொடுங்கோன்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=DFGLlxAnQZE
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
சனி, 24 ஜனவரி, 2026
யூ ட்யூபில் 5301 - 5310 வீடியோக்கள்
5301.கொச்சுவேலி பீச்சில் மிதக்கும் உணவகமும் பெண் சிற்பங்களும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=9Qmn_mvgmAE
#கொச்சுவேலிபீச், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KERALA, #THENAMMAILAKSHMANAN,
5302.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும் l கருப்பை நம் உயிர்ப்பை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=mLAonGs9OyU
#கருப்பைநம்உயிர்ப்பை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KARUPPAINAMUYIRPPAI, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 19 ஜனவரி, 2026
ஸ்பைக்கி
முள்முடி
”டண்டணக்கா டணக்கு னக்க.. டண்டணக்கா டணக்கு னக்க” பள்ளிக்கூடப் பக்கவாட்டுக் காம்பவுண்டை ஒட்டித்தான் இந்தச் சத்தம். செல்வி டீச்சரின் காதுகளில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஒலியும் எப்படியோ கேட்டு விடும். என்ன ஒரு திடுக்கிட வைக்கும் சத்தம்.
பள்ளியை ஒட்டி இருந்தது அந்த நீத்தார் விடுதி. அதன் முன்புறம் மாபெரும் ரோடு இருந்தது. அதன் வழியாகத்தான் தினம் நீத்தார் ஊர்வலம் முன்பு இடுகாட்டுக்குச் செல்லும். இப்போது ஒரு வாரமாகப் பள்ளியை ஒட்டி இருந்த அந்தப் பத்தடி சந்தில் சென்று கொண்டிருந்தது.
கோபம் மேலிட பள்ளியின் மெயின் கேட்டை விட்டு வெளியே வந்த செல்வி டீச்சர் பிண ஊர்வலம் திரும்பும் வரை காத்திருந்து அந்த நீத்தார் விடுதிக்குச் சந்தின் வழியாகவே சென்று சேர்ந்தார். அங்கே பெண்களின் கூட்டம் குளியலறையில் முண்டியடித்துக் கொண்டு இருந்தது.
நெல்லும் குந்தாணியும் கவிழ்த்து விடப்பட்டு இருக்கப் பாயைச் சுருட்டி எடுத்துச் சென்றாள் ஒரு பெண். முன்புறம் அந்த நீத்தார் விடுதியினை மேற்பாத்து வரும் நிர்வாகியிடம் சென்றார் செல்வி டீச்சர்.

